தீபாவளியையொட்டி சென்னையில் 900 வீரர்கள் பாதுகாப்பு பணி

by Staff / 08-11-2023 04:50:02pm
தீபாவளியையொட்டி சென்னையில் 900 வீரர்கள் பாதுகாப்பு பணி


தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் 900 தீயணைப்புத்துறை வீரர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். வரும் 11 முதல் 13ஆம் தேதி வரை தீயணைப்பு வீரர்களுக்கு விடுமுறை கிடையாது என துறை ரீதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் 500 பட்டாசு கடைகளுக்கும், தமிழ்நாடு முழுவதும் 6,563 கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக 1,000 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்கவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo