தமிழக வெற்றிக்கழக விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி-ஆலோசனை கூட்டம்-பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,.கே .ஏ. செங்கோட்டையன் தலைமையில்

by Admin / 15-12-2025 06:51:16pm
 தமிழக வெற்றிக்கழக விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி-ஆலோசனை கூட்டம்-பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,.கே .ஏ. செங்கோட்டையன் தலைமையில்

இன்று ஈரோடு பெருந்துறை தாலுகாவில் உள்ள விஜயமங்கலம் டோல்கேட் அருகே வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழக விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக நடத்த பெற்றது. ஒரு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக கூட்ட நேரம் 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் விஜய் 2026 இல் முதல்வராக வருவார் என்றும் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.

 தமிழக வெற்றிக்கழக விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி-ஆலோசனை கூட்டம்-பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,.கே .ஏ. செங்கோட்டையன் தலைமையில்
 
Tags :

Share via