இடைத்தேர்தல்.. 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு

by Staff / 25-02-2023 11:40:10am
இடைத்தேர்தல்.. 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால், தொகுதி முழுவதும் தேர்தல் பிரசாரத்திற்காக பல்வேறு கட்சியினர் அமைத்துள்ள முகாம்களை மாலை 5 மணிக்குள் காலி செய்து, உள்ளூர் அல்லாதவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். இதனிடையே திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அதிமுக, நாதக, தேமுதிக, சுயேட்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo