சங்கிகளின் கூட்டத்தில் இருப்பதனால் பழனிச்சாமி பொய் மூட்டைகளை அவுத்து கொண்டு இருப்பதாக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்
இன்று விருதுநகர் மாவட்டம் சத்திர ரெட்டி பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசினார். காமராஜருக்கு நினைவிடம் கட்டுவதற்கு தடை விதித்ததாகவும் முன்னாள் முதலமைச்சர் வி.என். ஜானகியின் நினைவிடத்திற்கு அனுமதி மறுத்ததாகவும் இ.பி.எஸ் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். ஒரு மகன்போன்றிருந்து காமராஜனுடைய இறுதி நிகழ்வுகளை செய்தவர் கலைஞர் கருணாநிதி என்றும் வி. என். ஜானகியின் புகைப்படத்தை வைத்தவர் கலைஞர். சங்கிகளின் கூட்டத்தில் இருப்பதனால் பழனிச்சாமி பொய் மூட்டைகளை அவுத்து கொண்டு இருப்பதாகவும் அவருடைய பொய்யையே ஒரு புத்தகமாக போடலாம் என்கிற அளவிற்கு பொய்களை சொல்கிறவர் என்றும் விமர்சித்தார்.எட்டாயிரம் ரூபாய் கூப்பன் குடும்பத் தலைவிகளுக்கு தருகிறோம் என்று சொன்னதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி கலங்கி போய் இருக்கிறார் என்றும் விஜயகாந்த் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் தானும் அவரும் ஒரு படத்தில் நடித்ததாகவும் அந்த படத்தில் அவர் ஒரு வேட்பாளராக ககாட்சிஅமைக்கப்பட்டிருக்கும். நான் அவரை ஆதரித்து ஒரு பாடல் பாடி பிரச்சாரம் செய்வது போன்று நடித்திருப்பேன் என்றும் அந்தப் பாடலை கலைஞர் கருணாநிதி தான் எழுதியிருந்தார் என்றும் குறிப்பிட்டு அந்த பாடலை பாடி காட்டினார்.
Tags :



















