புரட்டாசி மாதத்தில் புதன் ஆதிக்கம்- கிரகங்களின் தோஷம்-அதனால், நல்ல செயல்களை தவிர்த்து விடுகிறோம்.
மாதங்களில் பல நல்ல விஷயங்களை செய்வதற்கு தேர்ந்தெடுப்பது போன்று சில மாதங்களை விலக்கியும் அந்த மாதங்களில் எந்த விதமான நல்ல செயல்களையும் செய்யா நிலையையும் நாம் காண்கிறோம். ஆடி மாதம் புரட்டாசி மாதம், பொதுவாகவே எந்த நல்ல செயல்களையும் செய்யாமல் விலக்கக் கூடியதை நாம் பார்க்கிறோம். ஆடி ஆண்டாளுக்குரிய சிறப்பு மாதமாக பார்க்கிறோம். புரட்டாசி மாதம் பெருமாளுடைய விசேஷமான மாதமாக கொண்டாடுகிறோம். ஆனால், புரட்டாசியில் எந்த விதமான நல்ல செயல்களையும் நாம் செய்வதில்லை. அதற்கு காரணம், புரட்டாசி மாதத்தில் புதன் ஆதிக்கம் கன்னி ராசியோடு சூரிய சம்சாரம் செய்வதாலும் சனி- ராகு- கேது போன்ற கிரகங்களின் தோஷங்களை உருவாக்கக் கூடியதாகவும் இருப்பதாலும் திருமணம், வீடு கட்டுவது, கிரகப்பிரவேசம் செய்வது ,திருமண நிச்சயதார்த்தம் என நல்ல விஷயங்கள் எதையுமே நாம் செய்யாமல் தவிர்த்து விடுகிறோம். ஆனால். வழக்கமாக செய்யக்கூடிய வேலைகளை நாம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். நல்ல விஷயங்களை மட்டுமே இந்த புரட்டாசி மாதத்தில் நாம் செய்வதில்லை.
Tags :