கொரோனாவை விட மோசமான வைரஸ் இது தான்
கேரளாவில் தினசரி நிபா வைரஸ் பாதித்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், கொரோனாவை விட “நிபா” வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இறப்பு வகிதம் 2-3% வரை மட்டுமே இருந்தது. ஆனால், நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு வகிதம் 40-70% இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
Tags :