மணப்பெண் கண்முன்னே உயிரிழந்த சகோதரி.

by Editor / 09-09-2022 03:50:54pm
மணப்பெண் கண்முன்னே உயிரிழந்த சகோதரி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்துள்ள திட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு வேனில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, அந்த வேனை முந்தி செல்ல முயன்றுள்ளது. இதனால் அந்த வேன் டிரைவரரும் முந்தி செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் பயணித்தவர்களில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மணப்பெண்ணின் தங்கை சாந்தி என்ற பெண் வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் சோகம் ஏற்பட்டது. இந்த சூழலில் நடக்கவிருந்த திருமணமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories