குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் பெற்றோருக்குமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் 3 லட்சம் நிதியுதவி

by Staff / 11-03-2024 01:26:40pm
குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் பெற்றோருக்குமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும்  3 லட்சம் நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி கிராமம் அருகே நீராவிக் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் பெற்றோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரது குழந்தைகள் செல்வி சந்தியா (வயது 13), செல்வி கிருஷ்ணவேணி (வயது 10) மற்றும் செல்வன். இசக்கிராஜா (வயது 8) ஆகிய மூவரும் நேற்று 09. 03. 2024 மாலை தனது உறவினருடன் பேரூரணி கிராமத்தில் உள்ள நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையுமடைந்தேன்.இவ்விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via