நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்ட திருமாவளவன்

by Staff / 06-11-2023 01:20:13pm
நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்ட திருமாவளவன்

நீட் தேர்வு ரத்து கையெழுத்து இயக்கம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். அப்போது நீட் தேர்வு ரத்துக்கு ஆதரவாக கையெழுத்திட்ட திருமாவளவன், இந்த கையெழுத்து இயக்கத்தில் விசிக முழுமையாக பங்கேற்கிறது என்றார். இதன்பின் பேசிய உதயநிதி, 'நீட் தேர்வு காரணமாக இன்னொரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த கையெழுத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிமுக-வினர் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு உள்ளே வந்தது. இது திமுக பிரச்னையோ இளைஞரணி பிரச்சனையோ இல்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் பிரச்னை' என்றார்.

 

Tags :

Share via