பள்ளத்தில் கவிழ்ந்த ரோபோடாக்ஸி காயமடைந்த பெண்..

சீனாவில் பெண் ஒருவர், ரோபோ டாக்ஸியில் பயணித்த நிலையில் பள்ளத்தில் விழுந்து காயமடைந்துள்ளார். ஓட்டுநர் இல்லாமல் செல்போன் செயலி மூலம் இயங்கும் ரோபோ டாக்ஸியில் பெண் பயணித்துள்ளார். அப்போது, கட்டடத்திற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனையறியாத ரோபோ டாக்ஸி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், பள்ளத்தில் விழுந்த பெண்ணை சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்டனர்.
Tags : பள்ளத்தில் கவிழ்ந்த ரோபோடாக்ஸி காயமடைந்த பெண்..