இடிந்து விழுந்த கட்டடம்.. 4 பேர் படுகாயம்

by Editor / 09-08-2025 12:38:11pm
இடிந்து விழுந்த கட்டடம்.. 4 பேர் படுகாயம்

டெல்லியில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், கட்டடம் ஒன்று இடித்து விழுந்ததில், 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்த்பூரில் உள்ள ஹரி நகரில், கனமழை காரணமாக ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் குறைந்தது 3 முதல் 4 பேர் காயமடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via