தமிழக அரசியலில் அதிரடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவோடு அதிமுக தலைவர்கள் சந்திப்பு.- முக்கிய அறிவிப்பு வெளியாகிறது..?

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றார். திடீர் பயணமாகடெல்லி புறப்பட்டுச் சென்ற அவர், அதிமுக சார்பில் டெல்லியில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய அலுவலகத்தை பார்வையிட்டார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி பயணம் குறித்து நாளை 26 ஆம் தேதி விரிவாக தெரிவிப்பதாக கூறிச் சென்றார். எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாது, அதிமுக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் சென்னையிலிருந்து அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர்.. இந்தச் சந்திப்பில், அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரும் உடன்இருந்தனர்.இந்த பயணத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடம்பெறவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.என்ன காரணத்திற்காக சந்திப்பு என்பது குறித்து 26 ஆம் தேதி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : தமிழக அரசியலில் அதிரடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவோடு அதிமுக தலைவர்கள் சந்திப்பு.- முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகிறது..?