அ.தி.மு.க.பொதுக்குழு நடைபெறுமா? 11ந் தேதி காலை 9.00 மணிக்கு தீர்ப்பு
அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடேஸ்வரா மாளிகையில் 11ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்தது. அத்துடன் பொதுக்குழுவிற்கு தடை விதிக்காமலிருக்க உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தனர் . தடைகோரி ஒ.பி.எஸ் தரப்பும் மனு தாக்கல் செய்திருந்தனர் .உச்சநீதிமன்றம் இருதரப்பு வாதங்களுக்கு பின்பு பொதுக்குழுவுக்கு தடையில்லை என்றும் ஒ.பி.எஸ் தரப்பு உயர்நீதிமன்ற தனிநீதிபதியை அணுகலாம் என்று தீர்ப்பு வழங்கியது. ஏறகனவே , ஒ.பி.எஸ் தரப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுக்குழுவிற்கு தடைகோரி மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.சுமார் மூன்று மணிநேரம்வாதபிரதிவாதம் நடைபெற்றது.நீதிபதி இ.பி.எஸ் .தரப்பிடம் நான்கு கேள்விக்கு நாளை விரிவாக பதில் மனு தாக்கல் ்செய்ய உத்தரவிட்டார்.இன்று மீண்டும்விசாரணை நடைபெற்றது .மூன்று மணி விசாரணைக்கு பின்பு திங்கள் கிழமைகாலை 9.00 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார் .திங்கள் கிழமை காலை 9.15 க்கு பொதுக்குழுகூட்டம் நடைபெறும் என்று ]அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் தீர்ப்பு அதே நாளில் வெளியிடப்படும் என்றதால் அ.தி.மு.கவினர் கலங்கி போய் உள்ளனர்.
Tags :