வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் கொடுக்கும் திமுகவினர்.

by Staff / 04-07-2024 05:45:18pm
வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் கொடுக்கும் திமுகவினர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுகவினர் வேஷ்டி, சேலைகளை பதுக்கி வைத்துள்னர். அவர்களை கையும், களவுமாக பாமகவினர் பிடித்துள்ளனர். ஆசாரங்குப்பம் திமுக கிளைச் செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ஏ.சி ராமலிங்கம் என்பவரது வீட்டில் வேஷ்டி, சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்களை பாமகவினர் கைப்பற்றி அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

 

Tags :

Share via

More stories

Logo