"செத்து சாம்பல் ஆனாலும் நாதக தனித்தே போட்டியிடும்” - சீமான்

சென்னையில் இன்று (ஆக.11) நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நாதக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “விஜய் வருகையால் நாதகவுக்கு ஓட்டுகள் குறையும் என வதந்தியை பரப்புகின்றனர். தேர்தலில் தோற்று, செத்து சாம்பலானாலும் நாதக தனித்தே போட்டியிடும். அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்” என்றார்.
Tags :