கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் திருநங்கை

கர்நாடக மாநிலத்தில் கனரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமத்தை பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை 52 வயதான அனிதா பிரசாத் என்பவர் பெற்றுள்ளார். இது குறித்து பேசிய அவர், “இது வெறும் ஓட்டுநர் உரிமம் அல்ல. இது ஒரு கதவு. திருநங்கைகளும், பெண்களும் பேருந்து, சரக்கு மற்றும் கனரக வாகனங்களை இயக்கி தடைகளை தாண்டி அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும்” என அனிதா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Tags :