பாஜகவுக்கு திமுக முதல் ஆளாக ஆதரவு தரும் - கே.சி.வீரமணி

வேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், பாஜக, அதிமுக தவறான உறவு என முதல்வர் கூறியிருக்கிறார். அது யார் என்று நீங்கள் பொருந்திருந்து பார்க்கத்தான் போகிறீர்கள். கடந்த காலங்களில் அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள் என்பதற்காக தமிழ்நாட்டுக்கு பாஜகவை கொண்டுவந்து விட்டதே திமுக தான். இந்த தேர்தலில் மத்தியில் ஆட்சி இழுபறியானால் பாஜகவுக்கு முதல் ஆதரவு கொடுப்பது திமுகவாகத்தான் இருக்கும் என்று சாடினார்.
Tags :