12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு விருதுநகர் (97.85%) முதலிடம்

by Editor / 08-05-2023 11:35:14am
 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு விருதுநகர் (97.85%) முதலிடம்

தமிழகத்தில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் (97.85%) முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் (97.79%) இரண்டாம் இடத்திலும், பெரம்பலூர் (97.59%) மூன்றாம் இடத்திலும், கோவை (97.57%) நான்காம் இடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் 93.76% தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகமாகி உள்ளது. இந்த பொதுத்தேர்வில் 94.03 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும் சென்னை தேர்ச்சி விகிதம் 94.14% ஆகும்.97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 7,55,451 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். 326 அரசுப்பள்ளி மாணவர்கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றனர். 97.79 சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. 

 

Tags :

Share via