கள்ளுக்கடை திறப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்: பிரேமலதா
கள்ளுக்கடை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "டாஸ்மாக்கில் ரூ.40,000 கோடி டார்கெட் வைத்து விற்பனை நடைபெறுகிறது. அடுத்தாண்டு 50,000 கோடி, பின்னர் 60,000 கோடி.என அதிகரித்து கொண்டே தான் செல்லும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என தனது வீட்டின் வெளியே குடும்பத்துடன் டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்" என்று கூறியுள்ளார்.
Tags :