மருத்துவர்கள் தினத்தில் ஓபிஎஸ் வாழ்த்து

by Staff / 30-06-2024 01:41:09pm
மருத்துவர்கள் தினத்தில் ஓபிஎஸ் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வாழ்த்து செய்தியில், இந்திய சுதந்திர போராட்ட வீரரும், புகழ் பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ‘பாரத ரத்னா’ டாக்டர் பி.சி. ராய்-ன் பிறந்த தினமான ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நன்னாளில், மருத்துவர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, மருத்துவர்களுக்கான அனைத்து சலுகைகளையும் அரசு வழங்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை என கூறியுள்ளார்.

 

Tags :

Share via