கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

by Staff / 30-06-2024 01:46:09pm
கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நண்பர்களுடன் இணைந்து கோயில் திருவிழாவிற்கு பேனர் கட்டியபோது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூத்தாநல்லூரில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பிளக்ஸ் போர்டு வைத்த போது அதன் மீது மின் கம்பி உரசியதில், 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மதன்ராஜ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo