அடுத்தாண்டு ஆன்லைனில் நீட் தேர்வு

by Staff / 30-06-2024 01:58:41pm
அடுத்தாண்டு ஆன்லைனில் நீட் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் மே மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல முறைகேடு நடந்தது. இதையடுத்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், இதுபோன்று வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க ஆன்லைன மூலம் நீட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via