அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ப்பு.

by Staff / 29-10-2025 10:56:08pm
அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ப்பு.

 தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ள நிலையில், விழா நடைபெறும் அனந்தபுரம் பகுதி மற்றும் நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியில் இருந்து விழா நடைபெறும் இடம் உள்ளிட்ட முதல்வர் செல்லும் பாதைகள் உள்ளிட்ட பகுதிகளில் 5 மாவட்ட எஸ்பிக்கள், 5 ஏடிஎஸ்பிக்கள், 16 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அரியநாயகிபுரம் பகுதியில் இருந்து சுரண்டை வழியாக விழா நடைபெறும் அனந்தபுரம் பகுதிக்கு முதல்வர் சென்று கொண்டிருந்தபோது கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்கின்ற விழாவின் போது பிரேமா என்ற மாணவிக்கு வீடு வழங்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்த நிலையில், அதற்கான பணி ஆணையை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கி அந்த வீட்டின் கட்டிட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 இந்த நிலையில், அந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து அந்த மாணவி பிரேமாவிடம் செல்போனில் பேசினார்.

 தொடர்ந்து, கழுநீர்குளம் பகுதியில் முதல்வரை வரவேற்கும் விதமாக மாணவிகள் சிலர் சிலம்பம் சுற்றி அவரை வரவேற்ற நிலையில், தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய முதல்வர் மாணவி ஒருவரிடம் சிலம்பம் கம்பை வாங்கி அவரும் சிலம்பம் சுற்றி மகிழ்ந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கைத்தட்டி அதை ரசித்தனர்.

தொடர்ந்து, விழா நடைபெறும் இடத்திற்கு வந்த தமிழக முதல்வர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிலையில், தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்கத்தை பார்வையிட்ட பின்னர், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 1 லட்சமாவது வீட்டிற்கான சாவியை இலத்தூர் பகுதியை சேர்ந்த சுமதி என்ற பெண்ணுக்கு வழங்கி, சுமார் 1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

 குறிப்பாக, சுமார் 155.34 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகள் மற்றும் 290.60 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 131.54 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துவங்கி வைத்தல், 2,44,469 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சுமார் 1,020 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, விழா மேடைக்கு வந்த முதல்வருக்கு ஆட்சியர் கமல் கிஷோர், எஸ்.பி. அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து, பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறும் போது : எழில் கொஞ்சும், உச்சம் தலையை போல் உள்ளங்களை குளிர்விக்கும் இந்த மண்ணில் வடக்கே உள்ள காசி போல், தெற்கே இந்த தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலிற்கும் நமது அரசு தான் குடமுழக்கு நடத்தியது.

கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் மாணவி பிரேமா மற்றும், இந்த திட்டத்தின் 1 லட்சமாவது வீடானது சுமதி முத்துக்குமார் என்பவருக்கு இன்றை தினம் வழங்கப்பட்டுள்ளது.

மாவீரர்கள் பூலித்தேவன் மற்றும் ஒண்டிவீரன் ஆகிய தியாகிகள் வாழ்ந்த இந்த மண்ணில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி.

குறிப்பாக, இந்த விழாவினை சிறப்பாக நடத்திய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் வருவாய் துறை அமைச்சராக பொருப்பேற்ற நாள் முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக,10 .76.243 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவும், 9 லட்சம் பேருக்கு முதியோர் உதவி தொகை என பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

மேலும், தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புக்கள் இன்றைய தினம் வெளியிடப்போகிறேன்.

*அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர், காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு  ரூ.15 கோடியில் புதிய குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்படும்.

 * ரூ.52 மதிப்பீட்டில் சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், குருக்கள் பட்டி பகுதியில் குடிநீர் திட்டம் தொடங்கப்படும்.

*2 கோடி மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்படும்.

* ரூ.6 கோடி செலவில் கடையம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் கட்டப்படும்.
* சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி பகுதியில் ரூ.12 கோடி செலவில் கண்மாயிக்கள் தூர்வாரப்படும்.

* கடனாநதியானது ரூ.4 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு செய்யப்படும்.

* கடையநல்லூர் வரட்டாற்றில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு செய்யப்படும்.
* அடவிநயினார் கோவில் நீர்தேக்கத்தின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாயிக்கள் தூர்வாரப்படும்.

* வி.கே.புதூர், மாறாந்தை உள்ளிட்ட பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் கால்வாய்க்கள் சீரமைக்கப்படும்.
* ஆலங்குளம் அரசு கல்லூரியில் 1 கோடி மதிப்பிட்டில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அதேபோல், விவசாயிகள் விளைவித்த நெல் பயிர்களை நேரடியாக அரசே கொள்முதல் செய்ய தேவையான நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு ஞாயிற்று கிழமையும் செயல்பட்டு தீவிரமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

என்னவென்றே தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார்.

சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் என்பது நமது வாக்குரிமை பறிக்கும் முயற்சி. அதனால்தான் தாம் அதனை எதிர்க்கிறோம். இது தொடர்பாக, நவம்பர் 2-ம் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

 

Tags : அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ப்பு.

Share via