தவெக 2026 தேர்தலில் திமுக, பாஜக ,அதிமுகவுடன் கூட்டணி இல்லை.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இது குறித்து இன்று (அக்.29) பேட்டியளித்த அவர், "தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், திமுக, பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் ஏற்கனவே தெரிவித்துள்ளார்" என்றார்.இதன் மூலம், எதிர்வரும் தேர்தல்களில் தவெக தனித்துதான் போட்டியிடும் என்ற நிலைப்பாட்டை நிர்மல்குமார் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Tags : தவெக 2026 தேர்தலில் திமுக, பாஜக ,அதிமுகவுடன் கூட்டணி இல்லை-



















