மணிப்பூரில் கலவரம் காரணமாக அசாம், மிசோரமில் தஞ்சம் அடையும் மக்கள்.

by Editor / 11-05-2023 09:34:34am
மணிப்பூரில் கலவரம் காரணமாக அசாம், மிசோரமில் தஞ்சம் அடையும் மக்கள்.

மணிப்பூரில் கடந்த 3ஆம் தேதி தொடங்கிய கலவரத்தை தொடர்ந்து, 3375 பேர் மிசோரமில் தஞ்சம் அடைந்துள்ளனர். மிசோரமில் ஆறு மாவட்டங்களில் பெண்களும், குழந்தைகளும் தஞ்சம் அடைந்தனர். இந்த கலவர எதிரொலியாக 2300 பேர் தெற்கு அசாமின் கச்சார் மாவட்டத்தில் அரசின் எட்டு நிவாரண முகாம்களில் உள்ளனர். அதே சமயம் 600 பேர் மணிப்பூரில் அவரவர் சொந்த வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். மிசோரமில் தஞ்சம் அடைந்த 3375 பேரில் பெரும்பாலானோர் பழங்குடியினர் ஆவர். 1214 பேர் சைச்சால் மாவட்டத்திலும், 1142 பேர் கொலாசிப் மாவட்டத்திலும் தஞ்சம் அடைந்தனர்.

 

Tags :

Share via

More stories