குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் ஐப்பசி விசு திருவிழா திருத்தேரோட்டம் மேளதாளங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

by Editor / 12-10-2024 09:39:57am
குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் ஐப்பசி விசு திருவிழா திருத்தேரோட்டம் மேளதாளங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம்,  குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும்  சித்திரை விசு,ஐப்பசி விசு திருவிழா ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், திரு குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி மாத விசு திருவிழாவானது கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக இந்த கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்த நிலையில், பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.தினமும் சாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா ரதவீதிகளில் நடைபெற்றது. நாள்தோறும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான பஞ்சமூர்த்தி புறப்பாடு நேற்று 11 ஆம் தேதி விநாயகர், முருகன், திருக்குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மன்,  திருத்தேருக்கு எழுந்தருளினார்.இதன் தொடர்ச்சியாக பஞ்ச வாத்தியங்கள் முழங்க  நான்கு தேர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.அருள்மிகு நடராசமூர்த்திக்கு தாண்டவதிபராதனை 14 ஆம் தேதியும், சித்திர சபை நடராசமூர்த்திக்கு பச்சை சாத்தி மற்றும் தாண்டபதி பரதனை 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

Tags : குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் ஐப்பசி விசு திருவிழா திருத்தேரோட்டம் மேளதாளங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

Share via