ரயில் விபத்து – உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு.

by Editor / 12-10-2024 09:46:13am
ரயில் விபத்து – உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில்  நேற்று இரவு  நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்மீது, பயணிகள் ரயில் மோதியது.இந்த விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் தடம்புரண்டதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. 4 தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன.அவற்றை சீரமைக்கும் பானையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.மழையின்காரணமாக அந்தப்பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் விபத்து நேரிட்ட இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற பயணிகள் மாற்று ரயிலில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. நேற்று இரவுமுதல் தற்போது வரை முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நான்கு ரயில் தண்டவாளத்தில் ஒரு ரயில் தண்டவாளத்தை முழுமையாக சீரமைத்து, அதில் ரயில் சேவை தொடங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்பொழுது பணிகள் முழு வீச்சில்நடைபெற்று வருகிறது. ரயில்வே மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் என 500க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கவரப்பேட்டையில் தற்போது மழைபெய்து வரும்நிலையில், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பயணிகள் ரயில் மெயின் லைனில் செல்லாமல், லூப் லைனில் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது. 

 

Tags : ரயில் விபத்து – உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு.

Share via