80 லட்சம் மோசடி செய்த இளைஞரை கைது செய்த தென்காசிகுற்றப்பிரிவு போலீசார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்
க்யூ நெட் ஒர்க் என்ற நிறுவனத்தை தொடங்கி அந்தநிறுவனம் மூலமாக ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தை தொடங்கி அதன்மூலமாக பொருட்களை வோனியோகம் செய்து ஆட்களை கவர்ந்து இணைப்பு வளையத்தை உருவாக்கி யதாக கூறப்படுகிறது.மேலும் இவர் மேலநீலிதநல்லூர் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 80 லட்சம் வரை வசூலித்து அவர்களுக்கு குறிப்பிட்ட தொழில்வாய்ப்புக்களை வழங்காமல் ஏமாற்றிவந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் தென்காசி மாவட்ட காவல்துறை குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.இதனைத்தொடர்ந்து தென்காசி குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட உதயகுமார் என்ற இளைஞரை சென்னை சென்று கைது செய்து தென்காசி அழைத்துவந்து இன்று திருநெல்வேலி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Tags : 80 லட்சம் மோசடி செய்த இளைஞரை கைது செய்த தென்காசிகுற்றப்பிரிவு போலீசார்.