வட இந்தியாவில் தற்போது கடும் குளிரும் அடர் மூடுபனியும் வெகுவாக பாதித்து வருகின்றன.
வட இந்தியாவில் தற்போது கடும் குளிரும் அடர் மூடுபனியும் வெகுவாக பாதித்து வருகின்றன. ராஜஸ்தானில் பதேபூர் மட்டுமின்றி சுரு மற்றும் பிஹானேர் போன்ற பகுதிகளிலும் வெப்பநிலை மிக குறைவாக பதிவாகியுள்ளது. டெல்லி ,பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடர் மூடுபனி நிலவுவதால் சாலை போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :


















