விளைச்சல் குறைந்ததால் விலையேற்றம்...விர்ரென ஏறும் வெங்காயவிலை ..
தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் வெங்காயம் விலை அதிகரித்து காணப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.70 முதல் ரூ.85 வரை வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் சில்லறை விற்பனையில் ரூ.90 வரை விற் பனை செய்கின்றனர். இந்த விலை அதிகரிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவ்வப்போது இருப்பினும், தற்போது இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் வெங்காயத்தில் விலை 100 ரூபாயை எட்டும் என கூறப்படுகிறது. வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
Tags : விளைச்சல் குறைந்ததால் விலையேற்றம்...விர்ரென ஏறும் வெங்காயவிலை ..