யாருடன் கூட்டணி? தேமுதிக இன்று ஆலோசனை

by Staff / 07-02-2024 12:06:23pm
யாருடன் கூட்டணி? தேமுதிக இன்று ஆலோசனை

மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் எந்த கட்சி உடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்க உள்ளார் பிரேமலதா. தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக, பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில் தேமுதிக இன்று ஆலோசனை மேற்கொள்கிறது.
.
 

 

Tags :

Share via