ரேஷன் அரிசி கடத்தல் மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது
கடந்த23.01.2024 தேதி அதிகாலை திருநெல்வேலி சரக குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு முத்துக்குமார் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி குடிமை பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் திருநெல்வேலி தாலுகா தாழையூத்து அருகன்குளம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கள் சம்பந்தமா ரோந்து செய்து வந்தபோது அருகில் வயல்வெளியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது அங்கு சுமார் 566 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் சுமார் 23 டன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேற்படி அரிசி மூட்டைகளை சோதனை செய்த போது அனைத்து மூட்டைகளிலும் பொதுமக்களுக்கு விநியோகிக்கக்கூடிய ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது திருநெல்வேலி குடிமைப் பொருட்கள் வளங்கள் குற்றப்பிளனாய்வுத்துறை காவல் அதிகாரிகள் இது சம்பந்தமாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் அருகன் குளத்தை சார்ந்த சின்னதுரை மற்றும் அவரது தம்பி கணேசன் ஆகியோர் சேர்ந்து அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது மேற்படி பதுக்கி வைத்த ரேஷன் அரிசியை கேரளாவில் உள்ள கவாஸ்கர் என்பவருக்கு விற்பதற்கு வைத்திருப்பதாக போலீசார் கண்டுபிடித்தனர் இந்த வழக்கை தீவிரமாக புலன் விசாரணை செய்த திருநெல்வேலி சரக காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் அவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்த கலைஞர் , மகாராஜன், சாலை மாரியப்பன், சப்பானி முத்து, கணேசன், மூக்கன் ஆகியோரை நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர் இது சம்பந்தமாக திருநெல்வேலி குடிமை பொருள் வளங்கள் குற்ற புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்து கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 55 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் இருந்த ரேஷன் அரிசியையும் சுமார் 51 ரேஷன் அரிசி சாக்கு மூட்டைகளில் இருந்த 2050 கிலோ ரேஷன் அரிசியையும் மொத்தம் 23 டன் ரேஷன் அரிசியை புட்செல் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட கலைஞர் , மகாராஜன் ,சாலை மாரியப்பன், கணேசன், சப்பாணி முத்து, மூக்கன் ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கள் சம்பந்தமாக தீவிரமாக ரோந்து செய்து வருகின்றனர். இந்த ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை மாரியப்பன், மகாராஜன், கலைஞர். ஆகியோர் வீட்டிலும் நீதிமன்றத்திலும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுதுறையினர் ஒப்படைத்தனர்
Tags :