உதயநிதி பிரச்சாரத்திற்கு வந்த போது விபத்தில் ஒருவர் பலி

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலயில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரைகுமாரை ஆதரித்து விழுப்புரத்தில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொணொண்டார். இதில் கூட்டத்தைச் சேர்பதற்காக பல்வேறு கிராமங்களில் இருந்தும் பொதுமக்கள் டாடா வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர். சின்னத்தச்சூர் கிராமத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்த டாடா வாகனம் தென்பேர் என்ற இடத்தில் வந்த போது கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. விபத்தில் சின்னத்தச்சூரைச் சேர்ந்த 60 வயது முதியவர் அருள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :