அதிகார திமிர பணக்கார பவர தூக்கி போட்டு மிதிக்க தோணுது”... போலீஸை நடனமாடி கலாய்த்த இளம்பெண்... பரபரப்பு வீடியோ

by Admin / 27-08-2021 01:19:58pm
அதிகார திமிர பணக்கார பவர தூக்கி போட்டு மிதிக்க தோணுது”... போலீஸை நடனமாடி கலாய்த்த இளம்பெண்... பரபரப்பு வீடியோ

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் முக கவசம் அணியாமல் இருந்த பெண்ணை விசாரித்த போது அவர் திடீரென நடனமாடிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நின்றிருந்த இளம் பெண் ஒருவர், முக கவசம் அணியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரயில் நிலைய நடைமேடையில் பணியில் இருந்த பயண சீட்டு பரிசோதகர், முக கவசம் அணியாமல் நின்றிருந்த பெண்ணுக்கு அபராதம் விதித்துள்ளார். அதற்கு அந்த இளம் பெண் டிக்கெட் பரிசோதருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இதனால்  நடைமேடையில் பாதுகாப்பு பணிக்காக இருந்த பெண் ஆர் பி எப் வீரர்கள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்த போதே கையில் வைத்திருந்த முக கவசத்தை அணிந்து கொண்டு, திடீரென பாடிக்கொண்டே ஆட தொடங்கினார்

.  இதனால் சிறிது நேரம் ரயில் நடைமேடையில் பரபரப்பு ஏற்பட்டு ரயில் பயணிகள் இந்த பெண் செய்யும் நடவடிக்கைகளைப் பார்த்து ரசித்தபடி இருந்தனர். பின்னர் அபராதத் தொகை வசூலிக்க பட்டதால்  அந்த பெண் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அனுப்பி வைத்தனர்

 

Tags :

Share via