முன்விரோதம் காரணமாக அதிமுக வார்டு செயலாளர் வெட்டிப் படுகொலை .

by Editor / 28-07-2024 11:27:45am
 முன்விரோதம் காரணமாக அதிமுக வார்டு செயலாளர் வெட்டிப் படுகொலை .

புதுச்சேரி மாநில எல்லைப்பகுதியான கடலூர் மாவட்டம் திருப்பனம்பாக்கம் என்ற இடத்தில் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். கோவில் கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிய போது மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். டூவீலரில் சென்றவர் மீது காரை மோதவிட்டு கீழே விழுந்தவுடன் வெட்டிக் கொன்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags : அதிமுக வார்டு செயலாளர் வெட்டிப் படுகொலை

Share via

More stories