CBSE பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
சிபிஎஸ்சி பொது தேர்வு முடிவுகள் வருகிற மே 20ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, 10ஆம் வகுப்பிற்கு மார்ச் 13ஆம் தேதியும், 12ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 2ஆம் தேதியும் நிறைவடைந்தது. தற்போது வினாத் தாள்கள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதிக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
Tags :