கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி மற்றும் நொய்டாவில் உள்ள பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (பிப்., 07) காலை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் உறுதி செய்தனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர் குழு தீவிர சோதனை நடத்தினர். இதனிடையே நொய்டா துணை போலீஸ் கமிஷனர் ராம் பதன் சிங், தேர்வு பயத்தில் உள்ள மாணவர்கள் சிலரின் திசை திருப்பும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Tags :