தமிழகத்தில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு

கோவை பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஜெயராஜ், மகேஷ் துடியலூரில் பேக்கரி நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் கடைக்கு வராததால் கடை ஊழியர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து, மகேஷை கொலை செய்து விட்டு ஜெயராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :