மருத்துவமனையில் இருந்து தப்பித்து ஓடிய பெண் கைதி
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த பேரளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி கஸ்தூரி கடந்த சில ஆண்டுகளாகவே சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கஸ்தூரியின் சாராய விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த பேரளம் போலீசார் கடந்த 12 ஆம் தேதி கஸ்தூரியை கையும் களவுமாக பிடித்து திருவாரூரில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் அடைத்தனர்.
கடந்த 23 -ம் தேதி அன்று தனக்கு வயிறு வலிப்பதாக கஸ்தூரி சிறைக்காவலர்களிடம் கூறியுள்ளார்.இதையடுத்து கஸ்தூரி மேல் பரிதாபப்பட்ட காவலர்களும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்தனர். நேற்று வரை சிகிச்சை பெற்று வந்த கஸ்தூரி நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமாகியுள்ளார்.
பின்னர் சாராய வியாபாரி கஸ்தூரி மருத்துவமனையில் இருந்து தப்பியோடியதை அறிந்த சிறைக்காவலர்கள் கடும் அதிர்ர்சி அடைந்ததோடு, அது தொடர்பான தகவலை மேல் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினர். மேலும் சாராய வியாபாரி கஸ்தூரி போலீஸாருக்கு தண்ணீர் காட்டிவிட்டு தலைமறைவானதால் மீண்டும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Tags :