நடிகை கௌதமி அளித்த புகாரில் 6 பேர் மீது வழக்குப்பதிவு

நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் ஆறு பேர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜகவில் இருந்து இன்று விலகிய நடிகை கௌதமி, கோட்டையூரில் உள்ள ரூ.7.7 கோடி மதிப்பிலான சொத்துகளை அழகப்பன் என்பவர் அபகரித்ததாக புகார் அளித்தார். புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Tags :