கேரளாவில் சரக்கு ஆட்டோவில் மனைவியும் மகளையும் அழைத்து தீ வைத்து கொளுத்திய நபர்

கேரள மாநிலம் மாமல்புரம் சரக்கு ஆட்டோவில் மனைவியையும் மகளையும் அழைத்து தீ வைத்து கொளுத்திய நபர் ஒருவர் தன் மீது தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். கொண்டிராம்ப பகுதியைச் சேர்ந்த முஹம்மத் என்ற அந்த நபர் மீது போக்சோ வழக்கு ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரக்கு ஆட்டோவில் மனைவியும் இரு மகள்களையும் உட்காரவைத்து மோகமத் அவர்கள் வெளியே வராதபடி பூட்டி தீ வைத்ததாக கூறப்படுகிறது. பிறகு தன் மீது தீ வைத்துக் கொண்டு அவர் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .தீயில் கருகி அவரது மனைவியும் 17 வயது மூத்த மகளும் உயிரிழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐந்து வயது இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :