மத்திய அரசு பத்ம விருதுகள் அறிவிப்பு

by Staff / 26-01-2023 12:27:18pm
மத்திய அரசு பத்ம விருதுகள் அறிவிப்பு

பத்ம விருதுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. மறைந்த டாக்டர் திலீப் மஹாலனாபிஸ் மத்திய அரசின் பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வயிற்றுப்போக்கைத் தடுக்க உதவும் ORS-ஐ இவர் கண்டுபிடித்துள்ளார். மேலும் 25 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பி ராமகிருஷ்ண ரெட்டி (தெலுங்கானா), சங்குராத்திரி சந்திரசேகர் (ஆந்திரா), முனிவெங்கடப்பா (கர்நாடகா) மற்றும் ஹிராபாய் லோபி (குஜராத்) ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் கலைத்துறைக்காக வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories