செங்கோட்டை மதுரை-முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் 2ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கம்.

by Editor / 01-04-2022 09:09:39am
செங்கோட்டை மதுரை-முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில் 2ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கம்.

 
 தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து  சங்கரன்கோவில்,ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி,திருத்தங்கல் .மதுரை,செல்லும் மாணவர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள்,கூலித்தொழிலாளர்கள்,அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருந்த  செங்கோட்டை -மதுரை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மதுரை-செங்கோட்டைக்கு முன்பதிவு இல்லாத பயணிகள் சிறப்பு ரயிலாக இயக்க மதுரை கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.இதன்படி கடந்த 2021 ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் மதுரை-செங்கோட்டை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்  இயங்க தொடங்கியது. காலை 7.10 மணிக்கு மதுரையில் புறப்படும்  இந்த ரயில் காலை 10.35 மணிக்கு செங்கோட்டையையை வந்தடையுமாறு இயக்கப்பட்டு மீண்டும்  செங்கோட்டையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்ட ரயில் இரவு 7.10 மணிக்கு மதுரைசென்றடையும் வண்ணம் இயக்கப்பட்டது.இந்த நிலையில் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு ரயில் இயக்க தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கபட்டதைத்தொடர்ந்து  செங்கோட்டையிலிருந்து 14 பெட்டிகளோடு செங்கோட்டை -மதுரை பயணிகள் சிறப்பு ரயில் இயக்கம் 2020 ஆம் ஆண்டு மார்ச்க்குப்பின்னர் இன்று இயக்கம் தொடங்கியது.இதனைத்தொடர்ந்து இந்த ரயிலில் பயணிக்கும் செங்கோட்டை-மதுரை சீசன் பயணச்சீட்டு பயணிகள் சங்கத்தின் தலைவர் செல்வராஜ்,செயலாளர்.ராமையா.பொருளாளர் முருகன்,துணைசசெயலாளர்.கனேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் ரயில் ஓட்டுனர்களுக்கு பொன்னாடைபோர்த்தி பயணிகளுக்கு இனிப்பு வழங்கி தங்களது பயணத்தை தொடங்கினர்.ஏராளமான பயணிகள் இந்த ரயிலில் பயணத்தை தொடங்கினர்.

 

Tags : shencottai madurai train

Share via