பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  ஹீமாட்டாலஜீ அனலைசர் கருவி

by Editor / 01-07-2021 05:16:50pm
பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  ஹீமாட்டாலஜீ அனலைசர் கருவி



பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.
இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் சித்த மருத்துவத்திற்காக வந்து செல்கின்றனர் மேலும் இந்த மருத்துவமனையானது கொரோனா கேர் சென்டர் ஆக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் ரத்த பரிசோதனை எளிதாக செய்வதற்கு சுமார் 3.50 லட்சம் மதிப்பிலான ஹீமாட்டாலஜீ  அனலைசர் கருவியினை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ரத்தஆய்வு உபகரணத்தை திறந்து வைத்தார் ,
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த கருவியினால் உள் நோயாளிகளுக்கும் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு ரத்த பரிசோதனை செய்வது எளிதில் நடைபெறும்.
 சாதாரணமாக இரத்த பரிசோதனை செய்வதற்கு சுமார் ஒன்றரை மணி நேரம்  ஆகும் ஆனால் தற்போது இந்த நவீன உபகரணத்தால் ஒரு நிமிடத்திற்குள் பரிசோதனை முடிவுகள் தெளிவாக நமக்கு கிடைக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு விரைவாக தரமான சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் டெல்டா பிளஸ் அறிகுறியுடன் எந்த நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து பேசிய அவர் மாவட்டத்தில் ஆரம்பம் முதற்கொண்டே அரசு வழியை பின்பற்றி கண்காணித்து வருவதாகவும் மாநகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார் சமூக இடைவெளி பின்பற்றி முக கவசம் அணிந்து கவனமுடன் இருக்குமாறு விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்டம் முழுவதும் செய்யப்படுகிறது எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் அச்சப்பட கூடிய சூழ்நிலை எதுவும் இல்லை என்றும் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மிகக் குறைந்த அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார்

 

Tags :

Share via

More stories

Logo