விரைவில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை-அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு வெளிப்படைத் தன்மையுடன் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
சென்னை பல்கலையில் எம்.ஃபில். பட்டப்படிப்பு தொடரும். சென்னை பல்கலைக் கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.ஃபில். படிப்பைத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகங்களில் நியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்று துணைவேந்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
Tags :