ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - கேரள மாநிலம் திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ரயிலானது நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் (திங்கட்கிழமை) காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு மார்க்கமாக மட்டும் இயக்கப்பட உள்ள இந்த ரயிலானது சேலம், மதுரை, விருதுநகர், தென்காசி, செங்கோட்டை, கொல்லம் வழியாக திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.