பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலில் ஆயிரம் ஆண்டு பழமையான ஓவியங்களை அழிப்பு.

தமிழகத்தில் ஓவியக்கலை சங்க காலத்திலேயே முழு வளர்ச்சி பெற்ற நிலையில் இருந்துள்ளது என்பதற்கு பல சமகால இலக்கியங்கள் சாட்சியாக உள்ளன. சித்திர மண்டபங்களும், சித்திர மாடங்களும், சித்திரச் சாலைகளும், எழுத்து மண்டபங்களும் பரவலாக இருந்துள்ளன. கலையில் ஆர்வமிக்கவர்கள் அக்கூடங்களுக்குச் சென்று அந்த ஓவியங்களைக் கண்டு ரசித்தும் அது குறித்து கலந்துரையாடியும் இருந்தனர் என்பதுக்கு பரிபாடல், புறநானூறு, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களே சாட்சியாக இருந்து வருகின்றன.
திருநெல்வேலி மாவட்டம் பிரம்மதேசத்தில் உள்ள கைலாசநாதர் என்ற பழமையான கோயில் சுற்றுப்புற த்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சூர ஓவியங்கள் உள்ளன. அவை பெருமளவில் சிதைந்து இருக்கின்றன. இதை காப்பாற்ற வேண்டி இந்து சமய அறநிலையத்துறை கோயில் திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில் ஓவியங்களை தற்போது வாட்டர் பைப்பிங் மூலம் அழித்து கொண்டிருக்கிறது. தொல்லியல் அறிஞர்கள் இதில் உடனடியாக தலையிட்டு இச்செயலை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களின் கலைச் செல்வங்களை அரசே அழித்து ஒழிப்பதா? என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இன்று இதை நேரில் பார்த்த பக்தர் ஒருவர் அதனை புகைப்பாடமெடுத்து சமூக வலைத்தளங்களில் தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக தலையிட்டு இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
Tags : பிரம்மதேசம் கைலாசநாதர் கோவிலில் ஆயிரம் ஆண்டு பழமையான ஓவியங்களை அழிப்பு.