தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழை- வானிலை ஆய்வு மையம். 

by Staff / 25-06-2025 09:09:37am
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழை- வானிலை ஆய்வு மையம். 

நீலகிரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நேற்று மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கடும் குளிர் நிலவியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

கூடலூர் பேருந்து நிலையம் முன்பு சாலையில் தேங்கி நின்ற நீரால், வாகனங்கள் தத்தளித்தபடி குறைந்த வேகத்தில் பயணித்தன.இந்த நிலையில், காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஒரு சில இடங்களில் பலத்த தரைக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சென்னையில் லேசான மழை பெய்யும் என்றும், தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

 

Tags : தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மிதமான மழை- வானிலை ஆய்வு மையம். 

Share via