மறைந்த  வி.பி. சிங்-ன் பிறந்தநாள் விழா -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி.

by Staff / 25-06-2025 09:35:22am
மறைந்த  வி.பி. சிங்-ன் பிறந்தநாள் விழா -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி.

இந்தியாவின் 7வது பிரதமரும் சமூக நீதிக் காவலருமான மறைந்த வி.பி. சிங்-ன் பிறந்தநாள் விழா இன்று(ஜூன்.25) அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பான அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங்-ன் புகழை நாளும் போற்றுவோம்! ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்”இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த  வி.பி. சிங்-ன் பிறந்தநாள் விழா -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி.
 
Tags : மறைந்த  வி.பி. சிங்-ன் பிறந்தநாள் விழா -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி.

Share via