ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

சிறுவன் கடத்தில் வழக்கில் தொடர்புடையதாக கூறி, ஏடிஜிபி ஜெயராமனை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யவில்லை என்றால் ஏன் சஸ்பெண்ட் செய்தீர்கள் ? என கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது. காதல் திருமணம் செய்த இளைஞரின் தம்பியை கடத்தியது தொடர்பான வழக்கில், தனக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ஜெயராமன் மேல்முறையீடு செய்திருந்தார்.
Tags :